விபத்தில் வாலிபர் பலி

வானூர், மே 24: புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் காரில் சென்ைன சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா துருவை கிராமம் அருகே புறவழிச்சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். தகவல் அறிந்த வானூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: