அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

பண்ருட்டி, மே 24:  பண்ருட்டி  அருகே விசூர், மேல்மாம்பட்டு, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் தலைமையில் கொண்ட   குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சியில் அனுமதிபெறாமல்  குடிநீர் இணைப்புகள் இருப்பதை அறிந்து அவற்றை துண்டிக்குமாறு  சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பிடிஓ உத்தரவிட்டார்.இதன் பேரில்அனுமதி பெறாத 45  இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அப்போது, துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் சந்தோஷ்குமார், தமிழ்செல்வி, ஊராட்சி  செயலாளர் இளவரசன், வடிவேல்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: