×

சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ₹1 லட்சம் முட்டைகள் உடைந்து சேதம்

உளுந்தூர்பேட்டை, மே 24: நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனூர் என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த கண்ணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் வந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான முட்டைகள் நடுரோட்டில் கீழே விழுந்து உடைந்து சேதமானது. இந்த விபத்தால் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், விபத்துக்குள்ளான லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். முட்டை லோடு ஏற்றி வந்த லாரி உளுந்தூர்பேட்டை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் உடைந்த முட்டைகள் மட்டுமன்றி லேசாக உடைப்பு ஏற்பட்ட முட்டைகளையும் அள்ளிச் சென்றனர்.

Tags : Larry ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...