காங்கிரஸ் வெற்றி கிரண்பேடிக்கு காணிக்கை

புதுச்சேரி, மே 24: புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்றுள்ளார். மத்தியில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் புதுச்சேரி தொகுதியில் பெற்றுள்ள வெற்றியையும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான திமுக பெற்றுள்ள வெற்றியையும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காங்., வெற்றி குறித்து ஏனாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறும்போது, புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றியை கிரண்பேடிக்கு காணிக்கை ஆக்குகிறேன். மக்களுக்கு அவர் பல தொல்லைகள் கொடுத்தார். அவருக்கு என்ஆர் காங்கிரஸ் துணை போனது. இவர்கள் இருவருக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்றார்.

Related Stories: