×

நாமக்கல் தொகுதியில் சுற்று வாரியாக ஓட்டு விவரம்

நாமக்கல், மே 24: நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, தொடர்ந்து 22 சுற்றுகளில் முன்னிலை வகித்த திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் சின்ராஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கொமதேக வேட்பாளர் சின்ராஜ், அதிமுக சார்பில் காளியப்பன் உள்பட 29 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சின்ராஜ் (கொமதேக)  33,022 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் காளியப்பன் 17,916 வாக்கும் பெற்றார். இரண்டாவது சுற்றில் திமுக சின்ராஜ் 33,181, அதிமுக காளியப்பன் 18,680, முன்றாவது சுற்றில் திமுக சின்ராஜ் 32,298, அதிமுக காளியப்பன் 18,126,  நான்காவது சுற்றில் திமுக சின்ராஜ் 32,720,  அதிமுக  காளியப்பன் 18,936, 5வது சுற்றில் திமுக சின்ராஜ் 29,805, அதிமுக காளியப்பன் 19,519, 6வது சுற்றில் திமுக சின்ராஜ் 32,726, அதிமுக காளியப்பன் 19,393  வாக்குகள் பெற்றனர்.

7வது சுற்றில் திமுக சின்ராஜ் 31,496, அதிமுக காளியப்பன் 17,209, 8வது சுற்றில் திமுக சின்ராஜ் 29,727, அதிமுக காளியப்பன் 15,707 வாக்குகளும் பெற்றார். அப்போது அதிமுக காளியப்பனை விட, திமுக சின்ராஜ் 1,09,489 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். 9வது சுற்றில் திமுக சின்ராஜ் 31,143, அதிமுக காளியப்பன் 16,923,  10வது சுற்றில் திமுக சின்ராஜ் 31,558, அதிமுக காளியப்பன் 17,313,  11வது சுற்றில் திமுக சின்ராஜ் 29,631, அதிமுக காளியப்பன் 17,822, 12வது சுற்றில் திமுக சின்ராஜ் 30,905, அதிமுக காளியப்பன் 20,117, 13வது சுற்றில் திமுக சின்ராஜ் 32,477, அதிமுக காளியப்பன் 18,489 வாக்குகளும் பெற்றிருந்தனர். 14வது சுற்றில் திமுக சின்ராஜ் 31,671, அதிமுக காளியப்பன் 17,441ம் பெற்றார். அப்போது அதிமுக காளியப்பனை விட, சின்ராஜ் 2,01,230 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். தொடர்ந்து 15வது சுற்றில் திமுக சின்ராஜ் 29,154, அதிமுக காளியப்பன் 17,597ம், 16வது சுற்றில் திமுக சின்ராஜ் 33,189, அதிமுக காளியப்பன் 18,349ம் பெற்றனர்.

17வது சுற்றில் திமுக சின்ராஜ் 30,323, அதிமுக காளியப்பன் 16,651ம், 18வது சுற்றில் திமுக சின்ராஜ்  33,175, அதிமுக காளியப்பன் 18,262ம், 19வது சுற்றில் திமுக சின்ராஜ் 24,798, அதிமுக காளியப்பன் 14,400, 20வது சுற்றில் திமுக சின்ராஜ் 16,508, அதிமுக காளியப்பன் 10,443, 21வது சுற்றில் திமுக சின்ராஜ் 7,697, அதிமுக காளியப்பன் 5,581, 22வது சுற்றில் திமுக சின்ராஜ் 4,628, அதிமுக காளியப்பன் 4,175, 23வது சுற்றில் திமுக சின்ராஜ் 886, அதிமுக காளியப்பன் 994 வாக்குகளும் பெற்றனர். வாக்கு எண்ணிக்கை நடந்த 23 சுற்றில் 22 சுற்றுகளில் திமுக வேட்பாளர் சின்ராஜ் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதிச்சுற்றில் மட்டும் அதிமுக காளியப்பன் 108 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். ஆனால் ஒட்டு மொத்தமாக வேட்பாளர் சின்ராஜ், 2.65 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று, அதிமுக வேட்பாளரை படுதோல்வி அடையச்செய்தார்.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை