×

தபால் வாக்கு அறிவிப்பில் தாமதம் நிருபர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி, மே 24:  தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, நேற்று காலை 8.15 மணியளவில் தொடங்கியது. முதல் சுற்றுக்கு முன்பாகவே, தபால் வாக்கு பற்றிய விவரத்தை அறிவிக்க வேண்டும். ஆனால், நேற்றிரவு 10 மணியாகியும், தபால் வாக்கு பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, தபால் ஓட்டுக்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடைசி நேரத்தில் தான் அதுகுறித்து அறிவிக்க முடியும் என தெரிவித்து விட்டனர்.  முன்னதாக, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல் சுற்றுக்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் நீண்டநேரமாக அறிவிக்கவில்லை. இதனால் அங்கிருந்த நிருபர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மீடியா சென்டரில் இருந்து வெளியேறிய நிருபர்கள், திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா