ஆத்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா

ஆறுமுகநேரி, மே24: ஆத்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் கொடைவிழா நடந்தது.  ஆத்தூர் யாதவர் தெரு உச்சினிமாகாளி அம்பாள் கோயில் கொடைவிழா வில் முதல் நாள்  இரவு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது.  மறுநாள் செவ்வாய் கிழமை காலை தாமிரபரணி நதியின் சோம தீர்த்த கட்டத்தில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் மதியம் மகேஷ்வர பூஜையும் நடைபெற்றது.  மாலை 7 மணிக்கு  கும்பம் எடுத்து வரப்பட்டது.  நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து அக்கினி சட்டியுடன் கும்ப ஊர்வலம் நடந்தது.  மறுநாள் அதிகாலை படைப்பு தீபாராதனை நடந்தது.  காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடல்,  மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வழிா ஏற்பாடுகளை ஆத்தூர் யாதவர் சமுதாய மக்கள் மற்றும் வீரன் அழகுமுத்து யாதவ் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

Related Stories: