சேரகுளம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

செய்துங்கநல்லூர், மே 24: சேரகுளம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் அருகே உள்ள தெற்குகாரச்சேரியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தங்கபாண்டி (30). நேற்றிரவு 10.30 மணியளவில் வல்லகுளத்தில் இருந்து கால்வாய் செல்லும் சாலையில், இவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த சேரகுளம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: