கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி காலிறுதியில் பெங்களூரு அணி வெற்றி

கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் 8வது நாளான நேற்று (23ம் தேதி) நடந்த காலிறுதி போட்டிகளில் பெங்களூரு ஹாக்கி அசோசியேசன் அணி, சென்னை ஐசிஎப் ஹாக்கி அணி மற்றும் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இப்போட்டி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலையில் நடந்த 8வது நாள் போட்டியில் முதல் காலிறுதி போட்டி நடந்தது. இதில் புவனேஷ்வர் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே அணியுடன் பெங்களூரு ஹா’கி அசோசியேசன் அணி பெங்களூரு அணியினர் மோதினர். இதில் பெங்களூரு ஹாக்கி அசோசியேசன் அணியினர் 5:3 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டி’கு தகுதி பெற்றனர்.

Advertising
Advertising

இதையடுத்து மாலையில் நடந்த 2வது காலியுறுதி போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியுடன் சென்னை ஐசிஎப் அணியினர் மோதினர். இதில் சென்னை ஐசிஎப் அணியினர் 5:4 எனும் கோல்கண’கில் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடந்த 3வது காலியுறுதி போட்டியில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி அணியுடன் பெங்களூரு கனரா வங்கியினர் மோதினர். இதில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி அணியினர் 10:9 எனும் கோல்கண’கில் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த 4வது காலியுறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் மும்பை யூனியன் வங்கி அணியும் மோதினர். நாளை (25ம் தேதி) மாலை 5.30 மணி’கு நடக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோயேசன் பெங்களூரு அணியுடன் சென்னை ஐசிஎப் அணியினர் மோதுகின்றனர். தொடர்ந்து இரவு 7.15 மணி’கு 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது.

Related Stories: