வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் கடும் கெடுபிடி

தூத்துக்குடி, மே 24: தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கையின் போது போலீஸ் கெடுபிடியால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும் அடங்கும். இது தவிர ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையும் நடந்தது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி, பாஜ வேட்பாளராக தமிழிசை செளந்தர்ராஜன், அமமுக வேட்பாளராக புவனேஷ்வரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக பொன் குமரன் உட்பட 37 பேர் போட்டியிட்டனர். விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வசந்தம் ஜெயக்குமார், அதிமுக வேட்பாளராக சின்னப்பன், அமமுக வேட்பாளராக டாக்டர் ஜோதிமணி, சுயேட்சையாக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக நடராஜன் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சண்முகையா, அதிமுக வேட்பாளராக மோகன், அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக காந்தி உட்பட 15 பேர் போட்டியிட்டனர். தூத்துக்குடி மக்களவை மற்றும் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவம், ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 400 பேர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வஉசி பொறியியல் கல்லூரியின் வெளியேயும், வளாகத்திலும், வாக்கு எண்ணும் அறைகளிலும் நிறுத்தப்பட்டனர். இவை தவிர வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வழியில் 10 அடிக்கு ஒரு போலீசார் என சுமார் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் பயங்கர கெடுபிடியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

சண்முகையா       திமுக           73,241

மோகன்             அதிமுக            53,584

சுந்தர்ராஜ்           அமமுக           29,228

அகல்யா             நாம் தமிழர் கட்சி        8,666

உதயசெல்வன்          அனைத்து மக்கள் புரட்சி கட்சி        124

காந்தி                மக்கள் நீதி மய்யம்         1734

அக்ரி பரமசிவம்     இளந்தளிர் முன்னணி கழகம்         221

ராஜா                 இந்திய குடியரசு கட்சி (அ)    306

எட்டப்பன்            சுயேச்சை               116

சின்னச்சாமி         சுயேச்சை               387

பாலகிருஷ்ணன்     சுயேச்சை               119

மள்ளர் மகாராஜன்  சுயேச்சை               254

மாரியப்பன்          சுயேச்சை               167

முருகன்             சுயேச்சை               116

விளாத்திகுளம் தொகுதியில்

டெபாசிட் கிடைத்ததே மகிழ்ச்சி சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன் பேட்டி

Related Stories: