குளங்களை மறுசீரமைக்க தொழில்நுட்ப உதவி

கோவை, மே 23:கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களை மறுசீரமைக்க தொழில்நுட்ப ரீதியான உதவிகளுக்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் என மொத்தம் 8 குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த குளங்களை சுற்றியுள்ள பொது இடங்களை மேம்படுத்தவும், பூங்காக்கள், சைக்கிள் பாதை, நடைபாதைகளை சீரமைப்பது, கரைகளை பலப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை மையம், குளத்தின் மதகுகளை ஹைட்ராலிக் முறைப்படி அமைத்தல், பொழுது போக்கு அம்சங்களை கொண்டுவருதல் போன்றவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி குளம் ஆகிய 3 குளங்களை மறுசீரமைக்க ரூ. 152 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த குளங்களை மறுசீரமைக்க தொழில்நுட்ப ரீதியான உதவிகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணி துறை அதிகாரிகளுடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “குளங்களை மாநகராட்சி மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் எடுத்திருந்தாலும் குளங்கள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. பொதுப்பணி துறை அதிகாரிகள் தொழில்நுட்ப பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் அவர்களிடம் தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை கேட்டுள்ளோம்,” என்றார்.

Related Stories: