பருத்தி வரத்து அதிகரிப்பு ரூ.10.08 லட்சத்துக்கு விற்பனை

அவிநாசி, மே 23:  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடக்கிறது. இதன் படி நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 585 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடந்தது. பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ.5500 முதல் ரூ. 6155 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவின்டால் ஒன்றுக்கு ரூ.2500  முதல் ரூ.3500 வரையிலும் ஏலம் போனது.

டி.சி.எச்.ரகப்பருத்தி வரத்து இல்லை. பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.10 லட்சத்து எட்டு ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில், அவிநாசி, பல்லடம், திருப்பூர்,  கோபி, நம்பியூர்,  புளியம்பட்டி, சேவூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 116 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  8 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: