பின்னலாடை நிறுவனங்களில் ஊதிய உயர்வு, இ.எஸ்.ஐ. வசதி இன்றி தவிக்கும் தொழிலாளர்கள்

திருப்பூர், மே 23:   இந்தியாவின் ஆடை ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு, திருப்பூர் மூலமாக கிடைக்கிறது. இந்த அபார வளர்ச்சிக்கு காரணமானவர்கள் லட்சக்கணக்கான பின்னலாடை தொழிலாளர்கள் தான்.  திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில ்8,000க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது.  எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் இரு மடங்கு கூலி கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் கூறினாலும் என்றாலும், திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் 12 மணி நேரம் மற்றும் 16 மணி நேரம் சுழற்சி முறை வேலைகளில் வழக்கமான சம்பள விகிதத்தில் வேலை செய்கின்றனர்.

வெட்டுதல், தைத்தல், இஸ்திரிபோடல் போன்ற பணிகளுக்கான 12 மணி நேர சுழற்சி முறை வேலைகளுக்கான வழக்கமான சம்பளம் ரூ.350 முதல் ரூ.400 க்குள் உள்ளது. இடுதலுக்கு, ஆயத்த ஆடைகளை மடிப்பதற்கு, முடிக்கப்பட்ட ஆடைகளை சோதிப்பதற்கு மற்றும் தயாரான ஆடைகளை பொதிகட்டலுக்கான சம்பளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. தொழிலாளர்கள் சொற்பமான சம்பளத்திற்காக நீண்ட நேரம் கடுமையாக உழைக்கின்றனர். வீடுகள் பற்றாக்குறைவாகவும், விலை மிகுந்ததாகவும் உள்ளது. அதிகப்படியான வாடகை காரணமாக ஏராளமான தொழிலாளர்கள், தங்களது குடும்பத்தினருடன் வெறும் எட்டடிக்கு எட்டடி கொண்ட அறையில் வசிக்கின்றனர். உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திருப்பூரில் மிக அதிகம்.

திருப்பூரில் படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை இல்லாததால்  தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. கடும் உழைப்பை சிந்தும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு,  குடியிருப்பு, படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ மனை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டுமென தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: