ெதாட்டியம் அருேக சிறுமி கொடூர ெகாலை தாய், கள்ளக்காதலன் சிறையிலடைப்பு

தொட்டியம் மே 23:     தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரில் 5 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைபலையூர் பகுதியை சேர்ந்தவர் நித்யகமலா(32). இவரது கணவர்   பிரசன்னபாபு. இவர்களுக்கு லத்திகா(5) பெண் குழந்தை இருந்தது. தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நித்யகமலாவிற்கும்  மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்த முத்துப்பாண்டி (41) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் நித்யகமலா முத்துப்பாண்டியுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முத்துப்பாண்டி நித்யகமலாவை காட்டுப்புத்தூரிலிருக்கும் தனது குலதெய்வ கோயிலான அங்காளம்மன் கோயிலுக்கு லத்திகாயுடன் அழைத்து வந்துள்ளார். பின்னர் காட்டுப்புத்தூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 21ம் தேதி லத்திகா ஸ்ரீ பலத்த காயங்களுடன் சேலம்  அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீசார் சேலம் சென்று அங்கிருந்த நித்யகமலா மற்றும் தலைமறைவான முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லத்திகா பிரசன்னபாபுவின் குழந்தை என்பதால் முத்துப்பாண்டிக்கு சிறுமியை பிடிக்காமல்  இருந்துள்ளது. இதனால் நித்யகமலா முன்பாகவே லத்திகாயை அடித்து கொடுமைப்படுத்துவது தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 21ம்தேதி லத்திகாயை முத்துப்பாண்டி ரீப்பர் குச்சி மற்றும் பிளாஸ்டிக் பைப் குழாய் ஆகியவற்றால் சரமாரியாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நித்யகமலாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்கு சேலம் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் உத்தரவின் பேரில்  தொட்டியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சப்,இனஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் சிறுமியின் கொலைக்கு காரணமான நித்யகமலா மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் வழக்குப்பதிந்து கைது செய்து முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: