வளநாடு அருகே பாரம்பரிய கலைகளை கற்கும் பயிற்சி சிலம்பம், குதிரையேற்றத்தில் மாணவர்கள் ஆர்வம்

மணப்பாறை, மே 23:  வளநாடு அருகே கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு பாரம்பரிய கலைகளை கட்டணமின்றி கற்கும் பயிற்சி நடந்து வருகிறது. யோகா, சிலம்பம். குதிரையேற்றத்தை ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் கற்று வருகின்றனர்.

 மணப்பாறை அடுத்த வளநாடு அருகேயுள்ள வாடிப்பட்டியில் விதை இயற்கை வழி வாழ்வியல் கூடம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பினர், கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு அழிந்துவரும் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுக்களை கற்றுக்கொடுக்க ஒரு வார கால பயிற்சி முகாமை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சி முகாமினை தேனூர் தனியார் வங்கி மேலாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பாலசுப்ரமணியன் நடத்தி வருகிறார். இந்த முகாமில் திருச்சி, வாடிப்பட்டி, தேனூர், மணப்பாறை, வரதக்கம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்றைய தலைமுறையினர் தொலைகாட்சி கைபேசிகளுக்கு அடிமை ஆவதை தடுக்கவும், நமது பாரம்பரியதையும் கலைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து செல்வதுமே நமது கடமை என்று தொடக்க நிகழ்வில் உரையாற்றிய தனியார் வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார். இந்த பயிற்சியில் யோகா, சிலம்பம், குதிரையேற்றம், ஓவியம், மரபு விளையாட்டுகள் என அனைத்தும்  கட்டணம் எதுவும் இன்றி கற்றுத்தரப்படுகிறது.
Advertising
Advertising

Related Stories: