முசிறி எம்ஐடி மகளிர் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

தா.பேட்டை, மே 23: முசிறி எம்ஐடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் இளங்கோ தலைமை வகித்தார். துணைத் தாளாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். செயலர் ஆதித்யா நடராஜ் சிறப்புரையாற்றினார். விழாவை திரைப்பட நடிகர் தாமு கலந்துகொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக முற்போக்கு சிந்தனைகளை கூறி பேசினார். அப்போது முண்ணனி நிறுவனங்கள் நடத்திய நேர்காணல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தில் சேர உள்ளனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: