×

துப்பாக்கி சூட்டில் பலியானோர் நினைவு தினம்

திருவாரூர், மே 23: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரி–்ல் தனியார் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் பக்கத்து ஊர்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் 13 பேர் கடந்த ஆண்டு மே மாதம் 22ம்தேதி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகினர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 13 பேரின் இறப்பினையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருவாரூர் புதிய பஸ்நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் பலியான 13 பேரின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் விவசாய சங்க பொறுப்பாளர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளிக்கரையிலும் அஞசலி செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

Tags : Shotgun Day Memorial Day ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு