×

பேரூராட்சி நடவடிக்கை முத்துப்பேட்டை 5வது வார்டில் செப்டிக்டேங் குழாய் சீரமைப்பு அன்றும்

முத்துப்பேட்டை, மே 23: முத்துப்பேட்டை 5வது வார்டில் தியேட்டர் மண்டபம் எதிர்புறம் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ததால் சாலையில் தேங்கிய கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 5வது வார்டு பகுதியான தியேட்டர் மண்டபம் தெரு, கண்ணாரப்பத்தர் தெரு ஆகிய பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதேபோல் ஏராளமான காலனி அடுக்குமாடி வீடுகளும் உள்ளன. பேரூராட்சி முக்கிய பகுதியாக காணப்படும் இங்கு பேரூராட்சி சார்பில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தியேட்டர் மண்டபம் எதிரே ஒரு தனியார் காலனி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சாலையில் செல்லும் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்தது. அதனுடன் கழிப்பறையின் செப்டிக்டேங் கழிவுகளும் இதில் நிரம்பி இரண்டொரு கலந்து சாலையில் சுகாதாரமற்ற நிலையில் தேங்கி குளம் போல் கிடந்தது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் மக்கள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்துக்கொண்டு சென்றனர். அதேபோல் இவ்வழியாக பொதுமக்கள் பேருந்து நிலையம் கடைதெருவுக்கும், அதேபோல் மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் அவர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்று பேரூராட்சியில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.  இதனையடுத்து கடந்த 13ம் தேதி தினகரனில் இதனை சுட்டிக்காட்டி படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடைந்த சாக்கடை குழாயை அகற்றி புதிய குழாய் பதித்து அப்பகுதி சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : ward ,5th Ward ,
× RELATED அடிப்படை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை