ஓமலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி

ஓமலூர், மே 23:  ஓமலூர் வட்டார பகுதியிகளில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சாமந்தி, குண்டுமல்லி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுவது வழக்கம். கடந்த ஓராண்டாக மழை இல்லாத காரணத்தால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாயமும் பொய்த்து விட்டது. இந்நிலையில், விவசாயிகள் பப்பாளியை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். சொட்டு நீர் பாசனம் மூலம் மிக குறைந்த அளவு தண்ணீரே பாய்ச்சுவதால், அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது பப்பாளி அதிக விளைச்சல் கண்டுள்ளதாலும், விலை கூடுதலாகக் கிடைப்பதாலும், இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பப்பாளி கிலோ ₹10க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யபடுகிறது. அதே பப்பாளி வெளி சந்தையில், சில்லரையாக கிலோ ₹20 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: