மகுடஞ்சாவடியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

இளம்பிள்ளை, மே 23:  மகுடஞ்சாவடி பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மகுடஞ்சாவடி பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு குப்பாண்டிபாளையம், அழகனூர் ஆகிய பகுதியில் சாலையோரம் இருந்த 3 மரங்கள் சாய்ந்து விழுந்தன. மரம் முறிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. மேலும், அழகனூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீடு சேதமடைந்தது. மரம் சாய்ந்தில் மின்கம்பிகள் சேதமடைந்து அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். சேதமடைந்த பகுதிகளை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதே போல், இடைப்பாடி பகுதியிலும் பலத்த மழை பெய்ததில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது.

Advertising
Advertising

Related Stories: