×

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் பழுதடைந்து ஒருமாதமாக எரியாத மின்விளக்குகள்

ஆத்தூர், மே 23:  ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு தினசரி 400க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டபயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியில் பயணிகள் காத்திருக்கும் பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இந்த மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு ேநரங்களில், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆத்தூரில் இடியுடன் கூறிய மழை பெய்தது, அப்போது மின்னல் தாக்கியதில், பஸ் ஸ்டாண்டில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் அணைந்தது.
அதன் பின் கடந்த ஒரு மாதமாக, மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனை சீரமைக்க ேகாரி, பயணிகள் வழிகாட்டு சங்கத்தின் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால், பெண்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : Atoor ,bus stand ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி