ஓமலூர் வட்டாரத்தில் வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்

ஓமலூர், மே 23:  ஓமலூர் வட்டாரத்தில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்ததால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் சுமார் 88,540 எக்டர் பரப்பளவில், சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வட்டாரங்களில் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கிறது. வறட்சியால், சுமார் 30 ஆயிரம் தென்னை மரங்கள் காய்ந்து கருகி உள்ளது. ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி, எம்.செட்டிபட்டி, ஆட்டுக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காடையாம்பட்டி ஆகிய வட்டார கிராமங்களில் தென்னை மரங்கள் அதிகமாக காய்ந்து விட்டது. காய்ந்த தென்னை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விவசாயிகள் அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 3ஆண்டுகளாக கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழையும் இல்லாததால், தென்னைக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. இதனால் கடந்த 15ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள், பலன் தரும் தருவாயில் காய்ந்து எங்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: