இறுதி சடங்கு ஊர்வலத்தில் தகராறு 10 பேர் மீது வழக்கு

திருவையாறு, மே 23: திருவையாறு அருகே நடந்த இறுதி சடங்கு ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இறந்தார். இவரது இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு நடுக்காவேரி மெயின்ரோட்டில் வரும்போது வெடிவெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரை சேர்ந்தவர்கள் இருகோஷ்டியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ராஜ்குமார் மகன் திலீபன்ராஜ் (29) புகார் செய்தார்.அதன்பேரில் அதே ஊரை சேர்ந்த செந்தில், சிலம்பரசன், சுப்பிரமணியன், கிஷோர், கார்த்திகேயன் ஆகிய 5 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் செந்தில் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தினேஷ், ரமேஷ் (எ) புதியவன், திலீபன்ராஜ், சின்னையன் என்ற ராஜபாண்டி, சூர்யா ஆகிய 5 பேர் மீது நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: