வீரகனூர் பகுதியில் சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

கெங்கவல்லி, மே 23:  வீரகனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில், பயன்பாடின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு பதிலாக, ஆத்தூர் மெயின் ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகில், புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பயன்பாடின்றி இருக்கும் சுகாதார நிலைய கட்டிடத்தை, புதுப்பித்து துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, வீரகனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து விட்டனர். இது குறித்து மக்கள் கொடுத்த புகாரின் ேபரில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வீரகனூர் பகுதி சுகாதார ஆய்வாளர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

Advertising
Advertising

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அம்பேத்கர் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியை சேர்ந்த 300க்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக் கொதிப்பிற்கு மாத்திரை வாங்க, 2கி.மீ தொலைவில் உள்ள சுகாதார நிலையத்திற்கு ெசல்ல வேண்டியுள்ளது. எனவே, பயன்பாடின்றி இருக்கும் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: