கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை

ஆத்தூர், மே 23: ஆத்தூர் ஒன்றியம் தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெட்டு, இவரது மகள் செந்தமிழ்செல்வி, கல்லூரி மாணவி. இந்நிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன் மாணவியின் தாய், தந்தை இருவரும் இறந்து விட்டனர். இதனால் மாணவி கல்லூரி படிப்பிற்கு பணமின்றி சிரமப்பட்டு வந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செழியன், திமுக சார்பில் கல்லூரி மாணவிக்கு தேவையான நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் மனேகரன், மாவட்ட பிரதிநிதி விஜயன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் சசிகுமார், மணிகண்டன், ராஜசேகர், செல்வராஜ், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: