வாழப்பாடி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 வாரமாக பருத்தி ஏலம் ரத்து

சேலம் மே 23:வாழப்பாடி பகுதியில் பருத்தி சாகுபடி குறைந்துள்ளதால், வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு சங்கத்தில் 2 வாரமாக பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடியில் சேலம் வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலம் நடைபெறும். வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். கோடை வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் பஞ்சத்தாலும் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. இதனால், வாழப்பாடி வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த 2 வாரமாக பருத்தி ஏலம் நடைபெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேளாண்மை விற்பனையாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நடக்கும் பருத்தி ஏலத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருத்தி ஏலம் மூலம் சுமார் ₹25 கோடி வருவாய் கிடைக்கும். இது நடப்பாண்டில் பாதியாக, அதாவது ₹12 கோடிக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. போதியளவு மழை பெய்யததால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பருத்தி சாகுபடி குறைந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: