×

தெற்கு ரயில்வே உணவகங்களில் நேரடி உணவு விற்பனையை ஐஆர்சிடிசி விரிவுபடுத்த வேண்டும் டிஆர்இயூ தொழிற்சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 23: தெற்கு ரயில்வே உணவகங்ளின் மீது ரயில் பயணிகளின் புகார்கள் தற்போது குறைந்துள்ளதால்  நேரடி உணவு விற்பனையை ஐஆர்சிடிசி விரிவுபடுத்த வேண்டும் என டிஆர்இயூ ரயில்வே  தொழிற்சங்கம் வலியுறுத்தி யுள்ளது.தெற்கு ரயில்வே செயல்பாடுகள் குறித்த  மறு ஆய்வு கூட்டம் புது டெல்லியில்  கடந்த மார்ச் மாதம் ரயில்வே வாரியத்தில் நடந்தது.  அதில் தெற்கு ரயில்வே கடந்த 2018-19 நிதியாண்டு 4 ஆயிரத்து 791 உணவக சோதனைகளை நடத்தியதையும்,  2017-18 நிதியாண்டு உணவு தொடர்பாக 302 புகார்கள் பதிவாகி அபராத தொகை ரூ.13 லட்சத்து 95 ஆயிரம் தனியார் உணவகங்களிடம் வசூலானது, கடந்த 2018-19 நிதியாண்டு 118 புகார்கள் பதிவாகி ,அபராதத் தொ கை ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் வசூலானது பற்றியும் தெரிவித்தது.
ரயில் பயணிகளின்  புகார்கள் குறைந்தது குறித்தும் ரயில்வே உணவு விற்பனைப் பற்றியும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில பொதுச்செயலாளர்  மனோகரன் கூறியதாவது:நாடு முழுவதும்  246 விரைவு ரயில்கள், 24 சதாப்தி, 19 தூரந்தோ , 12 ஹம்சா பர், 17 ராஜதானி, 15 ஜன சதாப்தி, தேஜாஸ் மற்றும் கட்டிமான் தலா ஒன்று என 335 ரயில்களில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் நேரடியாக உணவு விநியோகத்தில் ஈடுபடுகிறது. இது தவிர சாமானியர்கள் உணவகங்களான 53 ஜன் ஆதார், 167 புத்துணர்ச்சி நிலையங்கள் உட்பட 247 நிரந்த உணவு விற்பனை நிலையங்களையும் 307 புட் பிளாச கடைகளையும் நேரடியாக ரயில் நிலையங்களில் நடத்துகிறது. இதில் 191 கடைகள் ஐ.எஸ்ஒ தர சான்றிதழ் பெற்றவை.

பயணிகளின் உணவு தேவைகளை ஈடுசெய்ய 409 எ மற்றும் ஏ1 தர ரயில் நிலையங்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு விநியோகம் செய்கிறது. உணவுகள் மீது ரயில் பயணிகள் திருப்தி அறிய மூன்றாம் நபர் சர்வேயினை ஐஆர்சிடிசி தொடர்ந்து நடத்துகிறது. 2017-18 நிதியாண்டு மட்டும் 117 ரயில்கள் மற்றும் 138 புட் பிளாசக்களில் இத்தகைய  சோதனைகளை நடத்தியது. இதே நிதியாண்டு டுவிட்டர் புகார்கள் உட்பட 6584 புகார்கள் நாடு முழுவதிலும் இருந்து உணவு தொடர்பாக பதிவாயின. மேல் நடவடிக்கையாக 341 ஒப்பந்தகார்ர்களை நீக்கியதோடு அந்த உணவகங்களையும் ஐஆர்சிடிசி எடுத்துக் கொண்டது.உணவு விற்பனையில் தற்போது “எ 1” தர நிலையங்களில் 81 சதவீதம், “ஏ” தர நிலையங்களில் 49 சதவீதம் “பி” தர நகரங்களில் 17 சதவீதம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை 2017-18 நிதியாண்டை விட 1500 சோதனைகள் கூடுதலாக 2018-19 நிதியாண்டில் நடந்தது. உணவு புகார்கள் குறைய இதுவே முக்கிய காரணம்.நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 300 பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் 2 .30  கோடி பயணிகளின் உணவு தேவைகளை ரயில்வே ஈடு செய்ய இயலவில்லை. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சுகாதாரமற்ற உணவு விற்பனை திருட்டுத்தனமாக ஆங்காங்கே நடக்கிறது. மேலும் இதன் மலிவான விலை பயணிகளை ஈர்க்கிறது.  இவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு , நேரடி உணவு விற்பனையை ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஐஆர் சிடிசி விரிவுபடுத்த வேண்டும் என கூறினார்.


Tags : TRUEU ,trade union ,IRCTC ,restaurants ,Southern Railway ,
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...