புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், மே 23:  நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும் குட்டி ஆகியவற்றை சந்தைக்கு விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். இதை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு  வந்திருந்தது. கடந்த வாரம் ₹5,500க்கும் விற்பனையான 10 கிலோ எடைகொண்ட இறைச்சி ஆடு,  இந்த வாரம் ₹5,200க்கும், ₹4,700க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு, இந்த வாரம் ₹4,400க்கும், பிறந்து ஒருமாதமே ஆன பெண் குட்டி ஆடு ₹1,100க்கும், கிடா குட்டி ₹1,200க்கும் விற்பனையானது. புதுச்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் பண்டிகை நிறைவடைந்ததால், நேற்று சந்தையில் ஆடுகள் விலை ₹300 வரை விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED நெருங்குகிறது பண்டிகை சீசன் தங்கம் விலை மேலும் குறையுமா?