ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் அமைதி ஊர்வலம்

குமாரபாளையம், மே 23: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அமைதி பேரணி நடத்தினர். முன்னதாக ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால், நகர தலைவர் ஜானகிராமன், துணைத்தலைவர் சுப்ரமணி, சிவக்குமார், சுப்ரமணி, சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர்.

× RELATED ராஜிவ்காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி