×

ஜெயங்கொண்டம் அருகே 56 பவுன் நகை, ரூ 1 லட்சம் பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம், மே 23: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை போனது.ஜெயங்கொண்டம் அருகே மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(-59). இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து கடந்த ஆண்டுஓய்வுபெற்று வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 5 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான நேற்று கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் மனைவி இந்திரா மற்றும் மகள் கார்த்திகா ஆகியோரை அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் சாமிக்கு தீபாரதனை நடைபெறும் நேரத்தில் மகள் கார்த்திகா தந்தைக்கு போன் செய்து கோவிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டார்.

சாமி கும்பிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பூட்டை திறந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் பின்பக்க கதவு வழியாக சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பார்த்தபோது வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 56 பவுன் நகை மற்றும் ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் ஆண்டிமடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொணடனர். கைரேகை நிபுணர் கை ரேகையை சேகரித்தார். மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Jayankondam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது