×

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் கோயில் பூப்பல்லக்கு

சிங்கம்புணரி, மே 23: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் பூப்பல்லக்கு நடைபெற்றது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கு நடைபெற்றது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் வண்ண மலர்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகளால் பூ பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் அய்யனார் எழுந்தருளினார்.

தொடர்ந்து பல்லக்கு மாடுகள் பூட்டிய சப்பரத்தில் வைக்கப்பட்டு நான்குரத வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக விநாயகரும் அடுத்ததாக சேவுகப்பெருமாள் பூரணை புட்கலை தேவியருடனும், இறுதியாக பிடாரி அம்மனுக்கும் நான்கு ரத வீதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பூ பல்லக்கு கோவிலை அடைந்தது. அங்கு சேவுகபெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பூப்பல்லக்கு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Sukupaperumal Temple ,Singapunal ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்