×

கலெக்டர் தகவல் வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளில் கடைகளில் விற்க வைத்திருந்த கெட்டுப்போன 15 கிலோ மீன்கள்

நாகை, மே23: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 15 கிலோ மீனை நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி அழித்தனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு தினந்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்வார்கள். இவ்வாறு வேளாங்கண்ணி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்கரை செல்பவர்கள் அங்குள்ள உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.இவ்வாறு சாப்பிடும் மீன்கள் உணவகங்களில் கொட்டுபோய் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கொட்டுப்போன மீன்களுக்கும் அதிக பணம் கேட்டு மிரட்டுவதாகவும் சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் வீடியோ வெளியானது. இந்த வீடியோவின் அடிப்படையில் ஆணையரகத்தில் இருந்து புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி மீன் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று கீழையூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனி பிரபு, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் நேற்று வேளாங்கண்ணி கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு செயல்படும் 50க்கும் மேற்பட்ட உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் உணவகங்களில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பழைய கெட்டுபோன மீன்கள் 15 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் சுகாதாரமாக கெட்டுப்போகாத மீன்களை மட்டும் உணவாக விற்பனை செய்யப்பட வேண்டும். கெட்டுப்போனதை மறைக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அனுமதிக்கப்பட்ட கலர் பயன்படுத்தக் கூடாது. உணவை கையாள்பவர்கள் தன்சுத்தத்தை பேன வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு எச்சரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் தயாரித்து விற்பனை மேற்கொள்ளப்படும் உணவுப் பொருட்களின் விலை குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஏதும் செய்ய இயலாது. அதேநேரம் விற்பனை செய்யப்படும் உணவு குறித்த புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ச்அப் வாயிலாக புகார் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்  பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்936 போலீசார் ஈடுபாடுமயிலாடுதறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 936 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடந்த 19ம் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் 485 போலீசாரும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நாகை மாவட்டம் முழுவதும் 451 போலீசார் என்று மொத்தம் 936 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று எஸ்பி விஜயகுமார் கூறினார்.


Tags : Collector ,areas ,Velankanni ,stores ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...