×

ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்வு

ஓசூர், மே 23: ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் சுமார் 1,500 ஏக்கரில் முள்ளங்கி பயிரிடப்பட்டது. தற்போது போதிய மழை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கியை பயிரிடவில்லை. இதனால், விளைச்சல் குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மாதங்களில் உழவர் சந்தைக்கு நாள்தோறும் 4 டன் வரை முள்ளங்கி வந்தது. அப்போது கிலோ ₹6 முதல் ₹8 வரை விற்பனையானது. தற்போது, பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர் குறைந்ததாலும், முள்ளங்கியை பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்யவில்லை. இதனால், விளைச்சல் குறைந்து, நாள் ஒன்றுக்கு சுமார் 2 டன் முள்ளங்கி மட்டுமே உழவர் சந்தைகளுக்கு வருகிறது. தற்போது, கிலோ ₹18 முதல் ₹20 வரை விற்பனையாகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் விளையும் முள்ளங்கி கோவை, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. முள்ளங்கி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்றனர்.  

Tags : area ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ