×

ராயக்கோட்டையில் மகாபாரத கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி, மே 23:  ராயக்கோட்டையில் உள்ள மகாபாரத கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் 18 பட்டி கிராம மக்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். சஜ்ஜலப்பட்டி கிராமத்தை தலைமையாக கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. 20 நாட்களாக நடந்த திருவிழாவில் மகாபாரத ஆன்மீக சொற்பொழிவு, இரவு மகாபாரத நாடகம் நடந்தது. இறுதி நாளான நேற்று, 18ம் நாள் போர் துரியோதனன் படுகளம் நாடக நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஞ்சாலி, சபதம் முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து ரத்தத்தில் கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பென்னாகரம் அடுத்த பிக்கிலி, கொல்லப்பட்டியைச் சேர்ந்த கோகுலகண்ணன் நாடகசபா குழுவினர்களால் நாடகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, துரியோதனன் இறுதி சடங்குடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி, தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Mahabharata Festival ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...