×

மழை பெய்ய வேண்டி சிறுவர்கள் நடத்தும் வினோத திருவிழா

ஆண்டிபட்டி, மே 23: ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தில் வறட்சியில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிலை செய்து சிறுவர்கள் சாமி கும்பிட்டனர். ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சார்பில் முத்தாலம்மன் கோயில் திருவிழா சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் நேற்று இப்பகுதியில் மழை பெய்ய வேண்டி சிறுவர்களே முத்தாலம்மன் சிலை செய்து, ஊரை நகர்வலம் வந்தனர். இதன் பின் சிலையை ஊருக்கு மேற்குப் புறமாக உள்ள ஓடையில் உடைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அறிவழகன் கூறுகையில், இப்பகுதியில் ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டி முத்தாலம்மன் சிலை செய்து சிறுவர்களுடன் இணைந்து திருவிழா கொண்டாடி வருகிறேன். எங்கள் ஊரில் முத்தாலம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழா நடந்து முடிந்த பின்னர் சில வாரங்கள் கழித்து, நானே முதல் நாள் முத்தாலம்மனுக்கு சிலை செய்வேன். அடுத்த நாள் அம்மனுக்கு வர்ணம் பூசி. அதற்கு அடுத்த நாள் அம்மனை மலர்களால் ஜோடித்து, சிறுவர்கள் நடனமாடிக் கொண்டு வாண வேடிக்கையுடன் நகரை வலம் வந்து, பின்னர் 3ம் நாள் சிலையை ஊரின் மேற்கே உள்ள ஓடையில் உடைப்போம் என்று தெரிவித்தார். இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், இப்பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க முத்தாலம்மனுக்கு சிலை செய்து சிறுவர்களை நடத்தும் இத்திருவிழா மிகவும் வினோதமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

Tags : Vinodha ,festival ,children ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...