×

டி.இடையப்பட்டி புதிய பாலம் சாலை சீரமைப்பு அன்றும்

தோகைமலை, மே 23: தினகரன் செய்தி எதிரொலியால் டி.இடையப்பட்டி புதிய பாலம் சாலை சீரமைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை வழியாக பாளையத்தில் இருந்து திருச்சி பகுதிக்கு மெயின் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனை நெடுஞ்சாலைதுறையினர்  பராமரித்து வருகின்றனர். இதேபோல் தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள டி.இடையபட்டி அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது மெயின் ரோட்டை சேதப்படுத்தி புதிய பாலத்திற்கான பணிகள் செய்யப்பட்டது.பின்னர் இந்த பணிகள் முடிவடைந்து 2 மாதங்கள் கடந்தும் மெயின் ரோட்டில் அமைத்த பாலத்தை சரி செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். மெயின் ரோட்டைவிட புதிய பாலத்தின் மட்டம் சுமார் 1 அடிக்கு மேல் உயரமாக இருந்ததால் தற்காலிகமாக மண்ணை கொண்டு சமம் செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்காலிகமாக பாலத்தில் அமைக்கப்பட்ட மண் சரிந்து குண்டும் குழியுமாக இருந்ததால் தினந்தோறும் வாகன விபத்துகள் நடந்து வந்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். திருச்சி பகுதிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்சும் சிரமத்திற்குள்ளானது

ஆகவே உடனடியாக திருச்சி தோகைமலை மெயின் ரோட்டை ஆய்வு செய்து டி.எடையபட்டி அருகே மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தின் அருகே தார் அமைத்து சரி செய்து, விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வகாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்குதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியால் 2 மாதங்களாக கிடப்பில் இருந்த டி.எடையபட்டி அருகே திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தின் அருகே தார் அமைத்து சரி செய்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் இப்குதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.

Tags : bridge road tunnel ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா