×

அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்ட்ரல் ரயில்வே, மும்பை அணி வெற்றி

கரூர், மே23: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் நாளான நேற்று மாலை நடந்த முதல் போட்டியில் சென்ட்ரல் ரயில்வே மும்பை அணி வெற்றி பெற்றது.கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றுமுன்தினம் முதல்  எல்ஆர்ஜி நாயுடு நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.இரண்டாம் நாளான நேற்று மாலை சென்ட்ரல் ரயில்வே மும்பை அணியும், ஏர்போர்ஸ் டெல்லி அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 61 புள்ளிகள் பெற்ற சென்ட்ரல் ரயில்வே அணி வெற்றி பெற்றது. 56 புள்ளிகள் பெற்ற ஏர்போர்ஸ் டெல்லி அணி இரண்டாமிடம் பெற்றன.

தொடர்ந்து, இரண்டாவது போட்டியாக இந்தியன் ஆர்மி, இன்கம்டாக்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. துவக்கம் முதலே, இந்தியன் ஆர்மி அணி அதிக புள்ளிகளை பெற்று வெற்றியை நோக்கி சென்றன. இறுதியில், இந்தியன் ஆர்மி அணி 70 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றன. 41 புள்ளிகள் பெற்ற இன்கம்டாக்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாமிடத்தை பெற்றன.தொடர்ந்து மூன்றாவது போட்டியாக, ஐசிஎப் சென்னை, பெங்களுர் பேங்க் ஆப் பரோடா ஆகிய அணிகள் விளையாடின.


Tags : India Basketball Tournament Central Railway ,Mumbai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...