×

அரூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரூர்,  மே  23: அரூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், குறைபாடுகள் உடைய 22 பஸ்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அரூர் கல்வி மாவட்டத்தில் மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 47 தனியார் பள்ளிகள்  செயல்பட்டு வருகிறது. இதில், 527 வாகனங்கள் உள்ளன. இந்நிலையில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, அரூர்-சேலம் சாலையில் நம்பிப்பட்டி அருகே கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 290 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22 வாகனங்களின் தகுதி சான்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டும், 20 வாகனங்கள் சிறுகுறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சரி செய்யவும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், முதல் நாள் குறைபாடுகள் கண்டறிந்து திருப்பப்பட்ட மற்றும் அன்றைய தினம் ஆய்வுக்கு வராத  167 வாகனங்களுக்கு ஆய்வு  மேற்கொண்டார். பின்னர் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கி, செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பறக்கும்படை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர், அலுவலக கண்காணிப்பாளர் செல்வமணி, ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா