×

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை சேலம் வரை இயக்க வேண்டும்

பாப்பிரெட்டிப்பட்டி, மே 23: திருப்பத்தூரில் நின்று செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை, சேலம் வரை இயக்க வேண்டும் என சங்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி தென்னக ரயில்வே பணியாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் வந்து நிறுத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் விடியற்காலையில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. திருப்பத்தூரில் மணிக்கணக்கில் நிறுத்தப்படும் ரயிலை, சேலம் வரை இயக்கி, சேலத்தில் இருந்து விடியற்காலையில் சென்னைக்கு புறபட்டு செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்தால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், மெணசி ஆகிய கிராம மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஏலகிரி எக்பிரஸ் ரயிலை சேலம் வரை இயக்கி, காலையில் சென்னையில் இருந்து வரும் போது, பொம்மிடியில் நின்று செல்ல ஆவண செய்யவேண்டும். மேலும், மழைக்காலங்களில் 2ம் நடைமேடையில், பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழற்கூடம் மற்றும் மின்விளக்கு வசதிகளை செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : Yelagiri Express ,Salem ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...