×

பெண்களுக்கு சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

சிவகாசி, மே 23: சிவகாசியில் பெண்களுக்கு இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் உதவியுடன் ஒருமாத சணல் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி சிவகாசியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. பயிற்சியில் சிவகாசி சுற்று பகுதிகளில் இருந்து 46 பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் 21 வகையான சணல்பை, கேண்ட்பேக், வாட்டர் பாட்டில் கவர், பைல், தரை விரிப்புகள், மிதியடிகள் அனைத்தும் கண்கவர் வண்ணங்களில் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்வதற்கான உக்திகள், கால மேலாண்மை, திட்டமிடுதல், வங்கிக் கடன் பெறுதல், மான்யம் பெறுதல், வெற்றிபெற்ற பெண் தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேற்படி பயிற்சியில் பயிற்சி முடிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்ககப்பட்டது.  நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் விஜயகுமார், மும்பை நாசர் குளோபல் லிங்ஸ் தீப்பெட்டி ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் வைரமுத்து, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது