×

சேதமடைந்த மேல்நிலை தொட்டி

சிவகாசி, மே 23: சிவகாசி அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசி ஆனையூர் ஊராட்சி சுந்தரவிநாயகர் காலனியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இப்பகுதி முழுவதும் இத்தொட்டியிலிருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொட்டியின் தூண்கள் மற்றும் மேற்பகுதி சேதமடைந்துள்ளது.

தொட்டியின் துாண்கள் அனைத்திலுமே சிமென்ட் பெயர்ந்து வெறும் கம்பிகளால் தாங்கி நிற்கிறது. தொட்டியை கடந்துதான் குடியிருப்புவாசிகள் செல்ல வேண்டும். மேலும் தொட்டி அருகிலேயே குடியிருப்புகளும் உள்ளன.திடீரென தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்சமயம் வரை தொட்டி பயன்பாட்டிலும் இருப்பதால், உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது, இத்தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...