×

மூதாட்டி உள்பட 2 சடலங்கள் மீட்பு

வேளச்சேரி, மே 23: பள்ளிக்கரணை கைவேலி அருகே வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் நேற்று அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, சென்னை ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேபோல், பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகே உள்ள குளக்கரையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.


Tags : Recovery ,corps ,
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...