×

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

விழுப்புரம், மே 23: விழுப்புரத்தில், பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையோரம் ஓட்டல்கள் முன் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகள் நடந்தாலும் வாகன எண்ணிக்கையின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இந்நிலையில், சாலையோரங்களில் இருசக்கர வாகனம், கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து கொள்வதால் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மாலை முதல் இரவு வரை சாலையோர டீக்கடை, ஓட்டல் முன் இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி ஆக்கிரமித்துக் கொள்வதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிர்புறத்தில் இருந்து திருச்சி சாலையில் நான்குமுனை சந்திப்பு வரை சாலையோரம் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள் முன் பார்க்கிங் வசதியில்லாமல் சாலையோரங்களில் பைக்குகள், கார்கள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் ரோந்து சென்றாலும் இந்த கடைகள் முன் வாகனம் நிறுத்துவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். விழுப்புரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி திருமால், நெரிசலை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல் ெபருந்திட்ட வளாகம் எதிரே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை