×

வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேர் கும்பல் அதிரடி கைது

புதுச்சேரி, மே 23:   அரியாங்குப்பத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான திருட்டு மணல் ஆசாமியை தனிப்படை தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறது. புதுவை, அரியாங்குப்பம், காக்காயன்தப்பு பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் அஜீத் என்ற அஜீத்குமார் (22). இவர் நேற்று மதியம் தனது நண்பர் அபிமன்னனுடன் வீராம்பட்டினம் ேராட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காக்காயன்தோப்பு மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல் அஜீத் சென்ற பைக்கை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிமறிக்கவே அபிமன்னன் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த கும்பல் அஜீத்தை சரமாரி வெட்டிய நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிய அஜீத் அருகிலுள்ள ஒரு வீட்டினுள் புகுந்தார். அவரது சத்தம் கட்டு மக்கள் திரண்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவானது. கை, காலில் வெட்டுக்காயம் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உடனே மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஜீத் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழிமறித்தல் (341), ஆயுதங்களால் தாக்குதல் (324), கொலை மிரட்டல் விடுத்தல் (506-2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.


முதல்கட்ட விசாரணையில், அரிக்கமேடு பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அடிக்கும் பிரச்னையில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுதது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்ட போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதன்படி அரியாங்குப்பம், பாரதி நகர் ஏமு என்ற ஏமநாதன் (21), ஆர்.கே. நகர் பிரகாஷ் (19), மணவெளி சதீஷ் (20), பாண்டியன் (25) உள்ளிட்டோரை தனிப்படை வலைவீசி தேடியது. இதில் பாண்டியனை தவிர்த்து மற்ற 3 பேரும் லாஸ்பேட்டையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தம்மன், ராஜன் தலைமையிலான தனிப்படை நேற்று அதிகாலை அங்கு விரைந்து அவர்களை அதிரடியாக கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாட்டு வண்டியில் திருட்டு மணல் அடிக்கும் பாண்டியன் இவ்வழக்கில் சிறை சென்று 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவரிடம் அஜீத் தரப்பு சென்று 10 லோடு மணல் அடிக்க வேண்டுமென கேட்டதாகவும், அதற்கு இப்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பதால் முடியாது என கூறி நிலையில் அஜீத் அவரை தாக்கியதாகவும், இதன் எதிரொலியாக பாண்டியன், தனது கூட்டாளிகளான தங்களை அழைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான திருட்டு மணல் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : gang ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...