×

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை தெற்கு ரயில்வே, ஐசிஎப் அணி வெற்றி

கோவில்பட்டி, மே 23: கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்காக அகில இந்திய அளவில் நடந்துவரும் ஹாக்கி போட்டியில் 7ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், சென்னை ஐசிஎப் அணியும் வெற்றி பெற்றன. கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்காத 11வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (22ம் தேதி) 7ம் நாள் போட்டிகள் நடந்தன. இதில் காலை 6.30 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் நியூடெல்லி நேஷனல் ஹாக்கி அகாடமி அணியினருடன் சென்னை தெற்கு ரயில்வே அணியினர் விளையாடினர். இதில் சென்னை தெற்கு ரயில்வே அணியினர் 4:3 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து மாலையில் நடந்த 2வது ஆட்டத்தில் பெங்களூரு ஹாக்கி அசோசியேசன் பெங்களூரு அணியுடன் சென்னை இந்தியன் வங்கி அணியினர் மோதினர். இதில் இரு அணிகளும் தலா 5 கோல் போட்டு சமநிலை பெற்றனர். பின்னர் நடந்த 3வது ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் அணியுடன் புனே பிஇஜி அன்ட் சென்டர் கிர்கி அணியினர் விளையாடினர். இதில் சென்னை ஐசிஎப் அணியினர் 3:0 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நடந்த 4வது ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் கர்நாடகா ஹாக்கி கூர்க் அணி மோதியது. இதில்  செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியினர் 2 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றனர். 8ம் நாளான இன்று (23ம் தேதி) காலிறுதி போட்டி நடக்கிறது.

Tags : India Hockey Contest Chennai Southern Railway ,ICF ,team ,Kovilpatti ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...