திருவழுதிநாடார்விளையில் இன்று பரி. இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா துவக்கம்

ஏரல், மே 23:  ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளையில் பரி. இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை இன்று (23ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகை நடக்கிறது. இதில் நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சாந்தி சிறப்பு செய்தியளிக்கிறார். நாளை (24ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடக்கிறது. இதில் இடையர்காடு சேகரகுரு ஜோப் ஜேசன் தர்மராஜ் செய்தியளிக்கிறார். காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலய பிரதிஷ்டை விழாவில் இரட்சணியபுரம் சேகர குரு பாக்கியராஜ்  சிறப்பு செய்தியளிக்கிறார். மாலை 4 மணிக்கு ஞானஸ்தான ஆராதனை, மாலை 7 மணிக்கு ஆசிரியர் ஜேக்கப் பஜனை ஆராதனை நடக்கிறது.  நாளை மறுதினம் (25ம் தேதி) காலை 7 மணிக்கு அசன துவக்க ஆராதனை, மாலை 6.30 மணிக்கு அசன விழா, இரவு 10 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடக்கிறது. வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் வாலிபர் பண்டிகையில் ஜாண் சாமுவேல் செய்தியளிக்கிறார். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சிறுவர் ஊழியம் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 ஏற்பாடுகளை ஏரல் சேகர தலைவர் அகஸ்டஸ் பால்பாண்டியன், சேகர உதவி குரு மணிராஜ், சபை ஊழியர்கள் கோயில் பிள்ளை, தர்மம் ஆனந்தராஜ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: