×

பக்கங்கள் எண்ணிக்கையும் அதிரடியாக குறைப்பு நோட்டு புத்தகம் விலை 20 சதவீதம் உயர்வு

நெல்லை, மே 23:  புதிய கல்வியாண்டிற்கான பள்ளி நோட்டு புத்தகங்கள் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த பக்கங்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
2019-20ம் கல்வியாண்டில், வருகிற ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தொடர்ந்து கலைக்கல்லூரிகளும் ஜூனில் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி நோட்டு புத்தகங்கள் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகி விற்பனைக்கு கடைகளில் வந்து குவிந்துள்ளன. வழக்கமாக ஆண்டுக்கு அதிகபட்சம் 5 சதவீதம் அளவிற்கு நோட்டு புத்தகங்கள் விலை உயர்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 20 சதவீதம் வரை நோட்டுகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோட்டுகளில் பக்கங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை கவருவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கிளாஸ்மேட் நோட்டுகளை பலவண்ண முகப்பு அட்டையுடன் தயாரிக்கின்றன. முகப்பில் கிரிக்கெட் வீரர்கள், , இயற்கை காட்சிகள் என பலவண்ணங்களில் அச்சிடப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு  முன்புவரை ஒரு குயர் நோட்டு என்பது 192 பக்கங்களை கொண்டதாக இருந்தது. பின்னர் 180 பக்கமாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 160 பக்க நோட்டுதான் ஒருகுயர் நோட்டு என விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதில்மேலும் பக்கங்களை குறைத்துள்ளனர். 152 பக்கம் உடைய நோட்டுதான் புதிய கல்வியாண்டில் ஒரு குயர் நோட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.20க்கு விற்பனையான ஒருகுயர் நோட்டு ரூ.25ஆக உயர்ந்து இருக்கிறது. லாங் சைஸ் ‘கிளாஸ் மேட்' நோட்டு ரூ.55ல் இருந்து ரூ.65ஆக உயர்ந்துள்ளது. ஷார்ட் சைஸ் கிளாஸ் மேட் நோட்டு ரூ.35ல் இருந்து ரூ.45 வரை உயர்கிறது. இதுபோல் வெவ்வேறு பக்கங்கள் கொண்ட நோட்டுகளுக்கும் புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து நெல்லை டவுன் நோட்டு புத்தக வியாபாரி ஜெயபால் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மூலப்ெபாருட்கள் விலையை காரணம் காட்டி மிகக் குறைந்த அளவில் கொள்முதல் விலையை உயர்த்துவார்கள், அல்லது பெரிய மாற்றம் இருக்காது. தற்போது காகிதம் தயாரிப்பதற்கான தண்ணீர் கிடைப்பதில்கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பெறவேண்டிய நிலை உள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களாலும் விலையை உயர்த்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு பக்கங்கள், குறைவு காரணம் ஒரு புறம் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகளில் அவர்களே நோட்டு புத்தகங்களை தயாரித்து விலை நிர்ணயித்து மாணவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர். இதன் காரணமாக சிறிய நோட்டு புத்தக வியாபாரிகளுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது, என்றார். இந்த ஆண்டு 20 சதவீதம் நோட்டு புத்தகம் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு பட்ஜெட்டில் கூடுதல் ெசலவு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கவலை அடைந்தள்ளனர்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா