காங்கயம் அருகே காற்றுக்கு மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது

காங்கயம், மே 22:  காங்கயம் - சென்னிமலை சாலையில் புளியமரம், வேம்பு, ஆலமரம் உள்ளது. இதில் 50 ஆண்டு வரை ஆன ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த சாலை கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டபோது, மரத்தையொட்டி தார்சாலை அமைக்கப்பட்டதால், சில மரங்கள் அகற்றப்பட்டது. மேலும் சாலை விரிவாக்கத்தால் பல மரங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பல இடங்களில் சூறைகாற்று வீசியது. இந்த காற்றின் போது, காங்கயம் அடுத்த நால்ரோடு பகுயில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டு ஆன வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது.   இதையறிந்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரத்தின் கிளை முறிந்து அருகே யிருந்த மின் கம்பிகள் மீது விழாமல் அருகில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: