கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு

திருப்பூர், மே 22: திருப்பூரில் மாநகராட்சி, தீயணைப்பு துறை நிலையங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டுதோறும் மே 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், அலுவலர்கள் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பது வழக்கம். அதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உறுதிமொழியை வாசிக்க, அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

அதே போல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் நிலைய அலுவலர் பாஸ்கர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தெற்கு தீயணைப்பு நிலையத்திலும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

காங்கயம்:  ராஜிவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கயத்தில் நேற்று மாலை அமைதி ஊர்வலம் நடந்தது.

இதில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த ஊர்வலம், வாரசந்தை, பஸ் நிலையம், கடைவீதி வழியாக சென்று, காங்கயம் காவல் நிலையம் முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.

இந்த ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாநில மாணவரணி தலைவர் அசோக்தாமன், துணை செயலாளர் கோகுல்காங்கேயன், மாவட்ட மாணவரணி தலைவர் பூபதி உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினத்தையொட்டி அமைதிப் பேரணி நடந்தது.இந்த பேரணிக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, துணைத்தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைதிப்பேரணி குமரன் சிலையில் துவங்கி குமரன் ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் வழியாக மாநகராட்சி காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. இதில், ராமசாமி, சித்திக், வெள்ளிங்கிரி, கோபால்சாமி, வக்கீல் பழனிச்சாமி உட்பட மாநகர் மாவட்ட கிளை கழக நிர்வாகிகள்  தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தாராபுரம்: தாராபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசு தலைமையில் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Related Stories: