×

சித்தூரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாலக்காடு, மே 22: பாலக்காடு மாவட்டம் சித்தூரம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. தந்திரி ஜாதவேதன் தலைமையில் கும்பாபிஷேக விழா விசேஷ பூஜைகள் 19ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மூன்றாம் நாள் உஷபூஜை, தகன ப்ரியத்கிஷணம், சதுர்திதாரா, பஞ்சகவ்யம், பதக்கம் ஆகிய கலசபூஜைகளும், தல் கலசாபிஷேகம், உச்சிக்கால பூஜை, சுகிர்தா ஹோமம், திலகஹோமம் ஆகியவை நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாமண்டலம் ஜான்சி, ஷனு குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கலாமண்டலம் ரவிக்குமார் குழுவினரின் துரியோதனவதம் என்ற தலைப்பில் கதகளி நாட்டியம்  நடந்தது. இன்று மாலை ஹோம பூஜை, பகவதி சேவை, ஸ்தல சுத்தி, விஷ்ணு சகஸ்ர ஜெபம், அத்தாழப்பூஜை நடக்கிறது. கலச மகா கும்பாபிஷேகம் மே 26ம் தேதி நடக்கிறது.

Tags : Kumbhabhishekam Temple ,
× RELATED செய்யூர் தாலுகா கருப்பூரில் கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேகம்